Fri. Mar 29th, 2024

வடமராட்சிக்கு நுகர்வோர் அதிகார சபை சோதனையிட வேண்டும் – மக்கள் வேண்டுகோள்

யாழ் மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் வடமராட்சி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசினால் அரிசியின் விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும் வடமராட்சி பகுதியில் பல அரிசி ஆலைகள் அரிசியை பதுக்கி மூடப்பட்டுள்ளது. அதேநேரம் வர்த்தக நிலையங்கள் எவற்றிலும் அரிசியின் விலைகள் காட்சிப்படுத்தப்படவில்லை.
நேற்று காலை மந்திகை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் 3100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. வீட்டிற்கு சென்று பணம் எடுத்து திரும்பி வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்து அரிசியை பெற முற்பட்ட போது 3200 ரூபா என விலை உயர்வடைந்துள்ளதாக பொதுமகன் ஒருவர் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார். வடமராட்சி பகுதியில் பல வர்த்தக நிலையங்கள் தமக்கு விரும்பிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்கின்றன. பிரதான வீதிகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களில் மேலும் விலைகள் அதிகரித்து காணப்படுகிறது. பல ஏழைமக்கள் தமது அன்றாட வருமானத்தை சமாளிப்பதற்காக கிராம வர்த்தக நிலையங்களில் கடனுக்கு பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இதனால் கிராம வர்த்தக நிலையங்களும் விலைகளை உயர்த்துகின்றன. நேற்று மன்னார் மாவட்டத்தில் அரிசி விலையை காட்சிப்படுத்தாது அதிக விலையில் விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்