வடக்கு வேலையற்ற பட்டாரிகள் யாழில் போராட்டம்!!
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இன மத பேதம் இல்லாமல் நல்லாச்சியை நடாத்தும் அரசு எந்த விடயத்திலும் பேதமை காட்டக்கூடாது என வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தினர். முன்பு இருந்த அரசால் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்க முடியும் என்றால் தற்போதய அரசால் வேலை வழங்க முடியும்தானே என பட்டதாரிகள் கேள்வி எழுப்பினர்.
அரசியல் தலைமைத்துவங்களிடம் தமது நியமனம் குறித்து பேசப் போனால் அவர்கள் தேர்தல் முடியட்டும் பிறகு கதைப்பம் என கூறுகின்றார்கள் என வேலையற்ற பட்டதாரிகள் விசனம் தெரிவித்தனர்.வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரச அதிபரிடம் கையளித்தனர்.