Thu. Sep 17th, 2026

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன்

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) திங்கட்கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
24.08.2026

About The Author

Share This:

Leave a Reply