வடக்கு கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி- அமைச்சர் ரிஷாட்
தொழிற்பயிற்சி நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 12,000 இளைஞர்கள் உள்ளனர் என்றும் அவர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அவர்களின் கல்வி மற்றும் திறன்களை சரியாக மதிப்பீடு செய்யபட வேண்டும். அவர்களுக்கு தொழில்முறை கௌரவம் வழங்கப்பட்டு . வேலைவாய்ப்பைத் தேடும்போது, மற்ற இளைஞர்களைப் போலவே அவர்களும் வழிநடத்தப்பட வேண்டும்
வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அவர்களுக்காகத் தயாரித்த படிப்புகள் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். அவர்கள் விரும்புவதை எளிதாகக் கற்றுக்கொள்ள கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் . அவர்கள் கற்றுக்கொள்வதை எளிதாக்கும் வகையில் இவை திருத்தியமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ”
அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதற்காக குறுகிய கால மற்றும் ஒரு நாள் பயிற்சி திட்டங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். இதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் கூறினார்