வடக்கு கிழக்கில் சட்டதரணிகள் பணிபுறக்கணிப்பு , சட்டத்தை மீறியோரை தண்டிக்க கோரிக்கை
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பிரச்சினையில் முல்லைத்தீவு நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குத் துணை நின்றபொலிஸாரை சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
இதனால் யாழ்பாணம் , கிளிநொச்சி முல்லைதீவு மற்றும் மன்னர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் பாதிப்படைந்ததுடன் ,பொது மக்கள் பெரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இந்த நிலையில் கல்முனை மற்றும் மட்டகளப்பிலும் நீதிமன்ற பணிபுறக்கணிப்பு இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது