லிந்துலை நகரசபைக்கு முன்னால் விபத்து – இருவர் படுகாயம்
தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கு முன்னால் மாலை ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தபொல பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், தலவாக்கலையிலிருந்து நகரசபை குறுக்கு வீதிக்கு திருப்ப முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.