Sun. Nov 15th, 2026

லயன்ஸ் கழகத்தின் கண் மருத்துவ முகாம் பலர் பயன்பெற்றனர்

நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகம் மற்றும் நல்லூர் லயன்ஸ் கழகமும் இணைந்து கைதடி நபீல்ட் பாடசாலை மாணவர்களுக்கான கண் மருத்துவ முகாம் ஒன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது லயன்ஸ் கழகங்களின் ஆதரவில் கண் வைத்திய நிபுணர் லயன் சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது
பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் என பலருக்கும் இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர் அப்பாடசாலை கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் த பிரதாப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் லயன்ஸ் Dr S சந்திரகுமார் வலயத்தலைவர் லயன் மா மகேந்திரன் வலயத்தலைவர் ஆகியோர் மற்றும் லயன்ஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed