லஞ்சம் வாங்கிய அதிபா்கள், ஆளுநா் விடாப்பிடி. விசாரணைகளை துாிதப்படுத்த உத்தரவு.
யாழ்.மாவட்டத்தில் இரு பாடசாலை அதிபா்கள் தமது பாடசாலையில் பிள்ளைகளை சோ்ப்பதற்கு லஞ்சம் வாங் கிய நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சிக்கியுள்ளனா்.
இந்நிலையில் மேற்படி இரு பாடசாலை அதிபா்களுக்கும் எதிரான விசாரணைகளை துாிதப்படுத்துமாறு வடமா காண ஆளுநா் சுரேன் ராகவன் பணித்திருக்கின்றாா்.
யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும், தென்மராட்சி கல்வி வலயத்திற் குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும் லஞ்சம் வாங்கிய நிலையில்
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சிக்கியுள்ளனா். அதிபர்கள் இருவர் மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிர்வாகமட்ட விசாரணைகளில் மோசடிகள் நிரூபிக்கப்பட்டால்
அவர்கள் இருவருக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவர் அனுமதிக்கு 3 லட்சம் ரூபா வரை பணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலும்
வடக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்தியுள்ளார். இதேவேளை, 2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கு அதிபர்கள் பணம் கோரினால்
அதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு உரிய முறைப்பாட்டை வழங்க வசதியாக விண்ணப்பப் படிவம் ஒன்றை வெளியிட ஆளுநர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.