ரிசாட் வீட்டில் திடீர் சோதணை!! -F.C.I.D, S.T.F களத்தில்-
புத்தளம் தில்வைலயடியில் உள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீடு திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர மற்றும் அதிரடிப் படையினரின் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தொடர் தீவிரவாத தற்கொலை தாக்குதல்களையுடுத்து அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந் நிலையில் அமைச்சர் ரிசாட், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்க பொலிஸ் தலைமையகத்தில் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்ப்ட்டது.
அக் குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகளின் ஒரு அங்கமாக இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்ட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
இதன்போது அந்த வீட்டில் இருந்து எந்த சந்தேகத்துக்கிடமான பொருட்களும் சிக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.