Sat. Dec 7th, 2024

ரணில் மற்றும் கரு ஜெயசூர்யாவின் ஆசியுடன் போட்டியிடுவேன் -´சஜித் நம்பிக்கை

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஆசீர்வாதங்களுடனும்,மற்றும் கட்சி உறுப்பினர்களின் சம்மதத்துடனும் ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறக்கபடுவேன் என்று நம்புவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார்.

அசோக்க அபேசிங்க, நலின் பண்டாரா, துஷாரா இடூனில் உள்ளிட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் குருநாகலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அவர் இதனை தெரிவித்தார்

இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கும் திறமையும் ஆற்றலும் எனக்கு உண்டு. நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், எனது முழு பலத்துடனும் தேசத்திற்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். நான் அதிகாலை 4.00 மணிக்கு எழுந்து நள்ளிரவு 12.00 மணி வரை வேலை செய்கிறேன். நான் ஏற்கனவே இந்த வழக்கத்தைத் கொண்டிருக்கிறேன். இது நாட்டின் நல்வாழ்வுக்காக மட்டுமே என்று அமைச்சர் கூறினார்.

எனது கையில் ரத்தம் இல்லை, எந்தவொரு மோசடி அல்லது பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்டியதில்லை. ஆனால் தற்பொழுது மத்திய கலாச்சார நிதியத்தின் நிதியை நான் முறைகேடாகப் பயன்படுத்தியதாக சிலர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் . அது முற்றிலும் ஆதாரமற்றது என்பதையும் நான் குறிப்பிட வேண்டும் ஏன்று அமைச்சர் பிரேமதாச கூறினார்.

“எங்கள் அரசாங்கத்தின் போது பெண்கள் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அல்லது துன்புறுத்தலுக்கும் உள்ளாகாமல் அவர்களின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம் அதுதான் நாட்டின் அனைத்து இளைஞர்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம், என்றும் அவர் மேலும் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்