Mon. May 18th, 2026

ரணிலை சந்தித்த கனிமொழி!! -மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சு-

இலங்கைக்கு வருகைதந்துள்ள தி.மு.க துணைத்தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமரை இன்று வெள்ளிக்கிழமை காலை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இவ்வுரையாடலின் போது கனிமொழி இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார.

மேலும் இச் சந்திப்பின் போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் , இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், உட்பட பல்வேறு முக்கியஸ்த்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed