ரணிலா சஜித்தா வேட்பாளர் இன்று பிற்பகல் தெரியவரும்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் எனும் விடயம் இன்று பிற்பகல் தெரியவரவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியினுள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
சஜித் நான் தான் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறிவரும் நிலையில் ரணில் விக்கிரம சிங்க தானும் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் கட்சிக்கிடையே சில குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தீர்ப்பதற்கு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் சஜித்திற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காமல் போனால் பாரிய விளைவுகளை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.