ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

‘பேட்ட’ படத்தின் வெற்றியை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்த பேட்ட படத்தின் பாக்ஸ் ஆபீஸ் 250 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தர்பார் படத்தை எந்திரனுக்கு பிறகு மீண்டும் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது . இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதுடன், மேலும் பிரதீக் பாபர், யோகி பாபு ,தலீப் தாஹில், ஜதின் சர்னா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தர்பார் படத்துக்கு அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார் .
இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது , ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2வது போஸ்டரையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது .
இந்த நிலையில் தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளிவந்ததையடுத்து , நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றும் தர்பார் படம் நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளார் மேலும் இந்த படம் மக்களுக்கு நிச்சயம் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.