Sat. May 25th, 2024

யோகிபாபு அடுத்தகட்டமாக ஆக்‌ஷன் ஹீரோ…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார் என்று கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக தற்போது வரை இருப்பவர் யோகிபாபு. இவர் தான் இப்பொழுது அதிக படங்களில் காமெடியனாக நடித்து வருகினறார் . இதனால் யோகிபாபுவை வைத்து தற்போது “காதல் மோதல் 50/50” எனும் ஆக்‌ஷன் கலந்த த்ரில் படம் உருவாகி வருகிறது.

பிரதாப் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைகிறார். பிரபல கன்னட திரைப்படமமான “த்ரயா” என்ற படத்தின் இயக்குனரான கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்கவிருக்கிறார் . இப்படத்தில் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவருகின்றன .

லிபிசினி கிராப்ட்ஸ் நிறுவனம் ர் இப்படத்தினை தயாரிக்கின்றது . ஆரம்பப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்