Fri. Feb 7th, 2025

“யூரியா நைட்ரேட” வெடிபொருள் கொண்டே ஈஸ்டர் தாக்குதல்!! -ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்-

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதலுக்காக யூரியா நைட்ரேட் எனப்படும் சக்தி வாய்ந்த வெடிபொருள் பயங்கரவாதிகளால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்று அரசாங்க ஆய்வாளர் கே.ஏ.வலியங்கே தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்iகியல்:-

நாட்டில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட யூரியா நைட்ரேட் ஒரு பாரிய அழிவை ஏற்படுத்தும் வெடிபொருள் ஆகும். இது இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறது.

இது பெப்ரவரி மாதம் 1993இல் நியூயோர்க்கில் நடந்த முதல் உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்