யா/மயிலணி சைவ மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
யா/மயிலணி சைவ மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மயிலணி முருக மூர்த்தி ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.


பாடசாலை அதிபர் பாலசுப்பிரமணியம் பிரதீபன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவலிங்கம் புஸ்பகாந்தன், சிறப்பு விருந்தினர்களாக பழைய மாணவர்களான இணுவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் மகேந்திரன் சிவானந்தன், நடேசு தயாளன் மற்றும் திருமதி. புஸ்பகலா தியாகபாலன், கெளரவ விருந்தினராக பொன்னுத்துரை ஸ்ரீரஞ்சன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.