யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா இன்று திங்கட்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் பதில் அதிபர் எஸ். பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் செல்வி. ஏபிரகாம் தயாளினி கலந்து சிறப்பித்தார். இதில் பிரதி அதிபர் திருமதி. ஜெ. யூடி ஜெயந்தன், பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் வே. கமலநாதன் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.