யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ரெனிஸ் மைதானம் திறப்பு விழா
யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ரெனிஸ் மைதானம் திறப்பு விழா எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் இ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கல்வி திணைக்கள உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.இராஜசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கு.கேதீஸ்வரன், யாழ்ப்பாண கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.சாரங்கன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக யாழ் கல்வி வலய உடற்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ந்.முருகதாஸ்காந்தன், யா/உரும்பிராய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும், யூசிஎம்ஏஎஸ் இயக்குநருமான திருமதி.றாதை பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.