Mon. Aug 10th, 2026

யாழ் வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினரால் மிலேச்சத்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று(21) யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.

1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்தது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள்,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.

நினைவேந்தலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed