யாழ் வல்வெட்டி கருணாகரன் விளையாட்டு அரங்கு திறப்பு விழாவும், மின்னொளி உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும்

யாழ் வல்வெட்டி கருணாகரன் விளையாட்டு அரங்கு திறப்பு விழாவும், மின்னொளி உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் இடம்பெற்றிருந்தது.
எனது விசேட நிதியின் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட கருணாகரன் விளையாட்டுக் கழகத்தின் திறந்தவெளி அரங்கும்,புலம்பேர் தேசத்து எமது உறவுகளின் பங்களிப்புடன் பல்வேறு வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு, 01/08/2019 அன்று அரங்கு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டி கருணாநிதி சனசமூக நிலையத்தில் இருந்து அதிதிகள் அழைத்து வரப்பட்டு கருணாகரன் விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
ஆரம்ப கலை நிகழ்வுகள், கண்காட்சி உதைபந்தாட்ட போட்டிகளும் நடைபெற்றது. இவ் போட்டியில் வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக் கழகமும், கொற்றாவத்தை ரேஞ்சேர்ஸ் விளையாட்டுக் கழகமும் எதிர்கொண்டிருந்தது.
பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டது.
தொடர்ந்து தேசிய ரீதியிலான விளையாட்டு அரங்கையொத்த வசதிகளுடன் மின்னொளியில் உதைபந்தாட்ட காட்சி போட்டியும் இறுதிப் போட்டியும் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் வதிரி டயமன்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் என்பன விளையாடியது.
இவ் போட்டியினை நிகழ்வில் கலந்துகொண்டிருந்த விசேடமாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இணைந்திருந்த அதிதிகள் போட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருணாகரன் விளையாட்டுக்கழக தலைவர் த.பிரபு தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் மற்றும் அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன பிரதிச் செயலாளர் அ.அருளானந்தசோதி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட முகாமையாளர் சிவராம், யாழ் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான கணேசமூர்த்தி, உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளர் இனியவன் உள்ளிட்ட அதிதிகள் இணைந்திருந்தனர்.
2-1 என்ற அடிப்படையில் ரேஞ்சேர்ஸ் அணியை , வதிரி டைமண்ட் அணி வெற்றி பெற்றிருந்தது.
உதைபந்தாட்ட இறுதிப் போட்டியினை காண்பதற்காக ஆயிரதிற்கும் மேற்ப்பட்டோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.