யாழ் வருகிறார் சஜித் பிரேமதாஸா!!
அமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை காலையில் யாழ்.முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
அதன் பின்னர் பிற்பகல் ஒரு மணியளவில் , கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நான்கு வீடமைப்புத் திட்டங்களை திறந்து வைத்து
மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்