யாழ்.வடமராட்சி கிழக்கு- பொற்பதி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
குறித்த பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்துள்ளனர்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்த போதிலும், சுமார் 5 மணித்தியாலங்களின் பின்னரே குறித்த பகுதிக்கு பொலிஸார் வருகை தந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களின் டிப்பர் வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் மணல் அகழ்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு பொற்பதி இளைஞர்கள் விழிப்பு குழு ஒன்றினை அமைத்து தமது சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.