யாழ் மாவட்ட ஹொக்கிச் சுற்றுப் போட்டி ஜெயசீலன் ஞாபகார்த்த கிண்ணம் – யாழ் பல்கலைக்கழக அணி வசம்

பரபரப்பான ஆட்டத்தில் ஜெயசீலன் ஞாபகார்த்த கிண்ணத்தை யாழ் பல்கலைக்கழக அணி தம்வசப்படுத்தியுள்ளனர்.
1990/1991 யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு கனடா நண்பர்களின் நிதி அனுசரணையுடன் யாழ் மாவட்ட ஹெக்கிச் சங்கத்தினரால் ஜெயசீலன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஹெக்கிச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதன் இறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து ஜொனியன்ஸ் அணி மோதியது.
நான்கு கால் பகுதி ஆட்டங்களாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை
இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடி சம பலத்துடன் மோதினர். இரு அணிகளும் தமக்கு கிடைத்த அரிய வாய்ப்புக்களை கோலாக்கத் தவறி விட்டனர். இதனால் கோல் எதனையும் பதிவு செய்யாமல் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால் சமநிலை தவிர்ப்பு மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் யாழ் பல்கலைக்கழக அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.


இதில் தொடர் ஆட்ட நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் யாழ் பல்கலைக்கழக அணியை பிரதிநிதித்துவம் செய்த ஏ.பி.யூ.சி.கசுன் தெரிவு செய்யப்பட்டார்.

3ம் இடத்தை ஓல்கோல்ட்ஸ் கிறிம்சன் அணி பெற்றனர்.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலை MBBS MS FCSSL FICS FRCS ஆலோசகரும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான
வைத்தி கலாநிதி டி. கோபிசங்கர், சிறப்பு விருந்தினராக LL.B, JPM. வழக்கறிஞர், நோட்டரி பப்ளிக், உறுதிமொழி ஆணையர் பி.குகனேஷ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.