யாழ் மாவட்ட வொலிபோல் பிறீமியர் லீக் இறுதியாட்டம்
யாழ் மாவட்ட வொலிபோல் சங்கம் மூன்றாவது தடவையாக நடாத்தும் யாழ் மாவட்ட வீரர்கள் பங்கு பற்றும் பிறீமியர் லீக்கின் இறுதியாட்டம் நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆவரங்கால் மத்தி விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.
இதன் இறுதியாட்டத்தில் ஆவரங்கால் கிங் ஸ்பைடர் அணியை எதிர்த்து நீர்வை யுனைடெட் அணி மோதவுள்ளது. யாழ் மாவட்ட வொலிபோல் சங்கத்தின் தலைவர் வடிவேலு செந்தூரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் மீன்வளம், நீர்வாழ் வளங்கள் மற்றும் கடல் மேம்பாட்டு அமைச்சின் அபிவிருத்தி குழுத் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் வடமாகாண ஆளுநர் செயலகத்தின் துணை செயலாளர் கணநாதபிள்ளை ஏகந்தன் ஆகியோரும் கலந்து கொள்ளஉள்ளனர்.