Wed. Jul 16th, 2025

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட தொடர் யாழ் பல்கலைக்கழக அணி மகுடம் சூட்டியது

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினரால் யாழ் மாவட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியினை கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடாத்தியது. இதன் இறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து விக்டோரி அணி மோதியது.

இதில் நான்கு கால் பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணி 31:27 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க தலைவி செல்வி.எஸ். மனோன்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னைநாள் வலைப்பந்தாட்ட வீராங்கனையும் சக்தி மிக்க உலக பெண்களின் முகாமையாளர் திருமதி.நிஷாந்தி சுரேஷ், சிறப்பு விருந்தினராக முன்னைநாள் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் செல்வி. கிரியா கந்தசாமி, கெளரவ விருந்தினராக முல்லைத்தீவு பெண்கள் வழிகாட்டி ஆணையாளர் திருமதி.என்.தர்மகுலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்