Fri. Mar 21st, 2025

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டம் மீண்டும் மிடுக்குடன் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி

சவர்வதேச மகளிர்தினத்தையொட்டி யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் பிரித்தானியா தமிழ்ப் பாடசாலைகளின் அமையத்தின் அனுசரனையுடன் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நாடாத்திய போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட
16 வயதுப் பிரிவினருக்கான
போட்டியின் இறுதியாட்டம் யாழ் இந்து மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 28:11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை பிரதிநிதித்துவம் செய்த ரி.தர்மினி சிறந்த மத்திய பிரதேச(Center) வீரராங்கனையாகவும், ஆர்.கிருத்திகா சிறந்தபேற்றுக்கு எய்யும்(G.S) விராங்கனையாகவும்,  ரி.அபிநயா சிறந்த பேறுகாப்பாளராகவும்(G.K;) ஏ.டினுயா வலைப்பந்தாட்ட 16வயதுப்பிரிவு ராணியாகவும்(Net ball Queen)தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்