Fri. Mar 21st, 2025

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட போட்டிகள் யாழ் இந்து மகளிர் கல்லூரியில்

மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் வலைப்பந்தாட்டத்தை வளர்க்கும் நோக்குடன் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கம் நடத்தும் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான போட்டி அட்டவணை தாயாரிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெறவுள்ளது. பங்கு பற்றவிருக்கும் பாடசாலையின் பொறுப்பாசிரியர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்க தலைவர் செல்வி மனோன்மணி அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்