யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் புதிய தலைவராக செல்வி சி.மனோண்மணி

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக செல்வி சி.மனோண்மணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் பொது கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் கடந்த வெள்ளிக்கிழமை யா/அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் புதிய தலைவராக செல்வி.சி.மனோண்மணி, செயலாளராக திருமதி சி.சகிலன், பொருளாளராக திருமதி.எஸ்.லஜித்தா, உபதலைவர்களாக செல்வி.சி.சுரேந்தினி, திருமதி எஸ்.சத்தியபாமா, செல்வி எஸ்.தனுஜா, உபசெயலாளர் திருமதி எஸ்.அஜந்தா, உப பொருளாளர் எஸ்.மைதிலி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.