Sun. Sep 8th, 2024

யாழ் மாவட்ட பி பிரிவு அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் அச்சுவேலி தோப்பு வாலிபர் அணி சம்பியனாகியது.

கைதடி தெற்கு சன சமூக நிலையத்தின் 64வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சி.சசிகரன் (லண்டன்), சி.சசிகாந்தன் ஆகியோரின் அனுசரணையில் யாழ் மாவட்ட பி பிரிவு அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் அச்சுவேலி தோப்பு வாலிபர் அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் நேற்று மின்னொளியில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் அச்சுவேலி தோப்பு வாலிபர் அணியை எதிர்த்து நீர்வேலி காமாட்சி அம்பாள் அணி மோதியது.
முதலாவது செற்றில் நீர்வேலி காமாட்சி அம்பாள் அணி 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த மூன்று செற்களிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அச்சுவேலி தோப்பு வாலிபர் அணி 25:22, 25:22, 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்