Wed. Jul 16th, 2025

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் 47 பதக்கங்களை கைப்பற்றி 2025ம் ஆண்டின் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் 47 பதக்கங்களை கைப்பற்றி ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் 22 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்கள் உட்பட 47 பதக்கங்களை கைப்பற்றி சம்பியன் கிண்ணங்களையும், நல்லூர் பிரதேச செயலகம் 13 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 26 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் 11 தங்கம், 11 வெள்ளி, 4 பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்களை கைப்பற்றி மூன்றாம் இடத்தையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் 11 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்கள் உட்பட 25 பதக்கங்களை கைப்பற்றி நான்காம் இடத்தையும், உடுவில் பிரதேச செயலகம் 8 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 15 பதக்கங்களை கைப்பற்றி ஐந்தாம் இடத்தையும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் 7 தங்கம், 4 வெள்ளி ஒரு வெண்கலம் உட்பட 12 பதக்கங்களை கைப்பற்றி ஆறாம் இடத்தையும், சாவகச்சேரி பிரதேச செயலகம் 6 தங்கம், 15 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்கள் உட்பட 30 பதக்கங்களை கைப்பற்றி ஏழாம் இடத்தையும், கரவெட்டி பிரதேச செயலகம் 6 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்களை கைப்பற்றி எட்டாம் இடத்தையும் கோப்பாய் பிரதேச செயலகம் 5 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை கைப்பற்றி ஒன்பதாம் இடத்தையும், சங்கானை பிரதேச செயலகம் 4 தங்கம், 8 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 13 பதக்கங்களை கைப்பற்றி பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்