Thu. May 21st, 2026

யாழ் மாவட்ட கரம் தொடர் கோப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலக அணிகள் சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலக கழகங்களுக்கு இடையிலான கரம் போட்டியில் கோப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலக அணிகள் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன்
யாழ் மாவட்ட செயலக விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட யாழ் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான கரம் போட்டிகள் நேற்று சனிக்கிழமை யாழ் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆண்களுக்கான போட்டியில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தையும், உடுவில் பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தையும் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed