Thu. May 21st, 2026

யாழ் மாவட்ட ஆண்கள் பெண்களுக்கான  வீதி ஓட்டம்

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கமும் யாழ் மாவட்ட விளையாட்டு பிரிவினரும் இணைந்து  யாழ் மாவட்ட ஆண்கள் பெண்களுக்கான  வீதி ஓட்டம் எதிர்வரும் 11ம் திகதி கரவெட்டி பிரதேசத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு 15  கிலோ மீற்ரர்,  பெண்களுக்கு 10 கிலோ மீற்ரர் தூரமும் நடைபெறவுள்ளது.
பங்கு பற்றவிரும்பும் மாணவர்கள் தமது அதிபரூடாகவும், கழக வீரர்கள் தத்தமது விளையாட்டு உத்தியோகத்தரூடாகவும் விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விஜிதரன் அவர்களுக்கோ அல்லது தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆசிரியர் சி.சுபாஸ்கரன் அவர்களுக்கோ அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கு பற்றுவோர் அடையாள அட்டை மற்றும் மருத்துவச் சான்றிதழுடன் 11ம் திகதி காலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை கரவெட்டி பிரதேச செயலகத்தில் தமது பதிவுகளை  மேற்கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed