யாழ் மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பண்டிகை கால அறிவித்தல்
யாழ் மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைக்கு முன்னர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில் (21/12)2025மற்றும் 28/12/2025) அழகக நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என
யாழ்மாவட்ட அழகக கூட்டுறவு சங்கங்களின் சமாசம் செயலாளர் ஆ.உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
நத்தார் பண்டிகைக்கு முன்னர் 22/23/24 ம் திகதிகளில் நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதோடு 25/12/2025 வியாழக்கிழமை நத்தார் பண்டிகை அன்று அனைத்து நிலையங்களுக்கும் விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு எதிர்வரும் 29/30/31ம் திகதிகளில் நேரகட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
