யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையில் கரப்பந்தாட்டப் போட்டிகள் மின்னொளியில்
புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் தமது 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மின்னொளியில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் நாளை மறுதினம் திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு சரஸ்வதி புத்தூர் அணியை எதிர்த்து மல்லாகம் நியூவொறியஸ் விளையாட்டு கழக அணியும், இரவு 8 மணிக்கு அச்சுவேலி விக்னேஸ்வரா விளையாட்டு கழக அணியை எதிர்த்து சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டு கழக அணியும் மோதவுள்ளன