Thu. May 21st, 2026

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிா்ப்பு தொிவித்து சந்தை வா்த்தகா்கள் போராட்டம்.

நல்லுாா் கல்வியங்காடு சந்தை வா்த்தகா்கள் யாழ்.மாநகரசபை முதல்வாின் செயற்பாட்டை கண்டித்து கதவடைப்பு போராட்டத்தை இன்று நடாத்தியிருக்கின்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை சுகாதார ரீதியாக ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை,

வரி அறவீட்டை இரண்டு மடங்காக மேற்கொள்கின்றமை, போன்ற செயற்பாடுகளைக் கண்டித்தும், மீன் சந்தைக்கான பாதையை பெரிதாக மாற்றித்தருவதாகவும்

இன்னும் சில விடயங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை யாழ்.மாநகர சபை முதல்வர் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக

கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். நீண்டகாலமாக புதிதாக சந்தைக் கட்டடம் அமைக்கும் பணி இடம்பெறுபோது வியாபாரிகள்

முன்பு சந்தைக்கு அண்மையில் வெற்றுக்காணி ஒன்றில் தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed