Mon. Dec 9th, 2024

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மருந்து ஏற்றிவந்த வாகனம் விபத்து!! -சாரதி படு காயம்-

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மருத்து ஏற்றி வந்த வாகனம் தடம் புரண்டதில் வாகன சாரதி படுகாயடைந்த நிலையில் கிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 233 ஆவது கிலோமீட்டருக்கும் 234 ஆவது கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட கிழவன்குளம் பகுதியில் இவ்வித்து இன்று நண்பகல் 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மருந்து பொருட்களை ஏற்றி வந்த கூலர் வாகனத்தின் முன்சக்கரம் காற்று போனதன் காரணத்தினால் வீதியை விட்டு விலகி தடம் புரண்டு சுமார் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் வாகனத்தின் உடைய சாரதி படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றார் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்