Thu. Apr 24th, 2025

யாழ் பிரதேச செயலக கபடி இரு பிரிவிலும் பாடுமீன் அணி சம்பியன்

யாழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அணிகளுக்கு
இடையிலான கபடி  போட்டியில் குருநகர் பாடும்மீன் அணி ஆண்கள் பெண்களுக்கான இரு போட்டிகளிலும் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான கபடிப் போட்டி அண்மையில் கலைவாணி மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்களுக்கான இறுதியாட்டத்தில்
பாடும்மீன் அணியை எதிர்த்து ஜெற் லயன்ஸ் அணி  மோதியது. ஆரம்பம் முதலே போட்டியை தம் வசம் வைத்திருந்த ஜெற்லயன்ஸ் அணி துரித கதியில் புள்ளிகளை பெற்று முதல் பாதி ஆட்டத்தில் முன்னிலை வகித்தது.
இருப்பினும் இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் பல வியூகங்களை வகுத்து களம் இறங்கிய பாடுமீன் அணி
ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இதனால் பாடும்மீன் அணியின் புள்ளிகள் உயர பரபரப்புக்கு பஞ்சமில்லா ஆட்டமாகவும் விறுவிறுப்பாகவும் ஆட்டம் மாற ஆட்ட நேர முடிவில் பாடுமீன் அணி 34:26 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
பெண்களுக்கான இறுதியாட்டத்தில் பாடும்மீன் அணியை எதிர்த்து  அன்ரனிஸ் அணி மோதியது. ஆரம்பம் முதலே போட்டியை தம் வசம் வைத்திருந்த பாடும்மீன் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அன்ரனிஸ் அணியினரால் புள்ளிகளை பெறுவதில் திணறினர். இதனால் ஆட்ட நேர முடிவில் பாடுமீன் அணி 32:4 எனும் புள்ளிகள் அடிப்படையிலே வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்