Tue. Sep 8th, 2026

யாழ்.பல்கலையில் மோதல்!! -7 சிங்கள மாணவர்களுக்கும் பிணை-

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7  சிங்கள மாணவர்களையும் பிணையில் வெளிச் செல்ல யாழ்.நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்கியுள்ள விடுதிவரை நீடித்தது. சம்பவத்தில் சிங்கள மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மாணவர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைது செய்தனர்.

அவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதிவான், அவர்கள் 7 பேரையும் பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed