Sat. Sep 7th, 2024

யாழ்.நகாில் 107 உணவகங்கள் மீது அதிரடி சோதனை..! 76 உணவகங்களில் சுகாதார சீா்கேடு..

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனின் உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர எல்லைக்குள் உள்ள 107 உணவகங்கள் மீது சுகாதார பாிசோதகா்கள் திடீா் முற்றுகை சோதனையை நடாத்தியுள்ளனா். இதன்போது உணவு கட்டுப்பாட்டு அதிகாாிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன. மேலும் ,

சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட உணவகங்களுக்கு மிக தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் பொதுசுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டதுடன் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த உணவகங்கள் மீது

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் 21 ஆளுநர் அவர்களின் தனிப்பட்ட செயலணி உறுப்பினர்கள் ஒவ்வொரு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டதுடன்

எட்டு பிரிவாக 51 பொதுச்சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை குறிப்பாக நல்லூர் மகோற்சவ திருவிழாவினை முன்னிட்டு மக்களின் நலன்கருதி சுத்தமான உணவுகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்