யாழ்.நகாில் முதலாவது பொிய நடைபாதை, 7ம் திகதி திறக்கப்படவுள்ளது.
யாழ்.முனீஸ்வரன் வீதியை நடைபாதையாக மாற்றும் நடவடிக்கையை யாழ்.மாநகரசபை மேற்கொண்டிருக்கு ம் நிலையில், 7ம் திகதி மேற்படி நடைபாதை திறக்கப்படவுள்ளது.
யாழ்.நகருக்கு அண்மையில் பிற மாவட்டங்களுக்கான பேரூந்து நிலையம் தற்போது அமைக்கப்படும் இடத்தில் இருந்து உள்ளூர் பேரூந்து நிலையத்திற்கு வரும்
வீதி முழுமையாக நடை கற்கள் பதிக்கப்பட்டு முழுமையாக நிழல் குடையும் பொருத்தப்படுகின்றது. நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இடம்பெறும்
குறித்த பணிகளும் மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்கரணவக்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா,
யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் ஆகியோரினால் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.