Sun. Sep 8th, 2024

யாழ்.நகருக்குள் புகுந்து ரவுடிகள் ரகளை, இரு ரவுடிகளை துரத்தி பிடித்த பொலிஸாா்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள யாழ்.நகருக்குள் இரு ரவுடி கும்பல் மோதலில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாா் இரு ரவுடிகளை கைது செய்துள்ளனா்.

ஸ்ரான்லி வீதியில் உந்துருளிகளில் தலைக் கவசமும் இன்றி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இரு குழுக்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அவதானித்த சிலர் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து நகரில் கடமையில் இருந்த பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு வருகை தந்தனர்.

இதன்போது உந்துருளி ஒன்றில் தப்பி ஓட முயற்சித்த இருவரை மடக்கிப் பிடித்த பொலிசார் இருவரையும் விலங்கிட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்