யாழ்.நகரில் ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் நடமாடியவர் கைது!!
யாழ்.நகரப்பகுதி சிறிதர் தியட்டருக்கு அண்மையில் ஒன்றரைக் கிலோ கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குருநகரை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
யாழ்ப்பாணம் நகருக்குள் கஞ்சா கடத்தல் சம்பவம் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் வளங்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் நேற்று இரவு யாழ் நகர் பகுதியில் விசேட தேடுதலில் விசேட அதிரடி படையினர் ஈடுபட்டனர். இத்தேடுதலின் போதே குறித்த நபர் கையும் பெய்யுமாக பிடிக்கப்பட்டார்.
கைது செய்த நபரிடம் இருந்து கஞ்சாவினை மீட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரை யாழ். பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்.குருநகரை சேர்ந்த 30 வயதுடைய நபர் என்றும் மேலதிக விசாரணைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பொலிசார் மேலும் தெரிவித்தனர்.