யாழ் நகரில் இரு கடை உரிமையாளர்களிடையே மோதல்!! -வாள்வெட்டுக்கிலக்காகி 3 பேர் வைத்திய சாலையில்-
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இரு கடை உயரிமையாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் நடந்த வாள்வெட்டில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-
குறித்த கடை உரிமையாளர்கள் இருவருக்கும் இடையில் மிக நீண்ட நாட்களாக முரண்பாடு இருந்து வந்துள்ளது.
இந்த முறுகல் நிலை முற்றி இன்று வெள்ளிக்கிழமை காலை இரு தரப்பினர்க்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது கடைக்குள் இருந்த கத்தி, வாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் 3 பேர் கை, கால், முதுகப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தயி சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.