யாழ் தேவி முன் பாய்ந்த ஒருவர் தற்கொலை!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் குதித்து ஒருவர் தற்கொலை செய்த கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சாவகச்சேரி பகுதியில் வைத்தே இவ்வாறு புகையிரதத்திற்கு குதித்ததாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கொழும்பு-2 பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.