யாழ் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் வடமராட்சி பகுதியில் கஞ்சா மீட்பு

யாழ் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் வடமராட்சி பகுதியில் 220 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது.
வடமராட்சி பொலிகண்டி கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிகண்டி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் 98 பொதிகள் அடங்கிய சுமார் 220 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் மற்றும் படகு கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.