Thu. May 21st, 2026

யாழ் ஆசிரியை தீ காயமேற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியை ஒருவர் எரிகாயங்களுக்கு உட்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அறைக்குள் பெற்றோல் காணப்பட்டதாகவும், அதில் தீ ஏற்பட்ட நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed