Sat. May 16th, 2026

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்டம் பமிலியன்ஸ் அணி சம்பியன்

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டி ரவ்வேல் மகாராஜா சவால் கிண்ணத்திற்கான வருடாந்த சுற்றுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பமிலியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் கடந்த 7ம் திகதி யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பமிலியன்ஸ் அணியை எதிர்த்து யமஹா அணி மோதியது.
இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் பமிலியன்ஸ் அணி 53:37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் பற்றிக் எட்வேட் ஹென்றி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. சிவநேசன் சபானந்,  சிறப்பு விருந்தினராக யாழ்மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கதிர்வேலு விஜிதரன்,  கெளரவ விருந்தினராக மக்கள் வங்கி முகாமையாளர் சிதம்பரப்பிள்ளை மோகனச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed