Wed. Mar 11th, 2026

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினரின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினரால் யாழ்மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டத்தை வளர்க்கும் நோக்கில் புதிதாக கூடைப்பந்தாட்டத்தை ஆரம்பிக்கும் பாடசாலைகள் மற்றும் கழகங்களுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
இதில் ஒரு அங்கமாக தற்போது கூடைப்பந்தாட்டத்தை ஆரம்பித்து இருக்கும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில்  கடந்த வியாழக்கிழமை தமது பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
இப்பயிற்சியை யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட செயலாளரும், யாழ்மாவட்ட பயிற்றுவிப்பாளருமாகிய ஜெயபாலன் யசிந்தன் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
யாழ்மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினரின் செயற்பாடு தேசிய ரீதியில் முதன்மை வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed