யாழ்மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த வடமாகாண கல்விப் பணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

யாழ்மாவட்ட பாடசாலைகளில் நாளை மறுதினம் வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தொடர்பான சிரமதானம் மேற்கொள்ளப்பட வேண்டும் இதனை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்ய வேண்டுமென வடமாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
யாழ்மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையிலும், க.பொ.த.உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளமையைமும் கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்மாவட்டத்தில் தீவகம், வலிகாமம், வடமராட்சி, யாழ்ப்பாணம், தென்மராட்சி கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு நுளம்பு வளரக் கூடிய ஏதுவாக இருக்கும்
சிரட்டைகள், பேணிகள், நீர் தேங்கும் இடங்கள் என்பவற்றை அகற்றுவதன் மூலம் டெங்கு பரவாமல் தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்வதுடன் வலயக்கல்வி பணிப்பாளர்கள் அன்றைய தினம் மேற்பார்வையில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.