Wed. Jul 22nd, 2026

யாழ்மாநகர சபை கல்வி மற்றும் விளையாட்டுக்குழு துரையப்பா விளையாட்ரங்கிற்கு  கள விஜயம்

யாழ்மாநகர சபை கல்வி மற்றும் விளையாட்டுக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் துரையப்பா விளையாட்ரங்கிற்கு  கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் மாநகர சபை கல்வி மற்றும் விளையாட்டுக்குழு தெரிவு செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குள் நேற்று துரையப்பா மைதான தற்போதைய நிலை தொடர்பாக யாழ் மாநகர சபை கல்வி மற்றும் விளையாட்டுக்குழு தலைவர் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அங்கு மேற்கொள்ள வேண்டிய கழிவு அகற்றல் மற்றும் மைதானம் புற்களுக்கு நீர் பாச்சுதல், மலசல கூட சுத்தம், தேவையான விளையாட்டு உபகரணங்கள், தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
எதிர்வரும் 16,17,18,19,20 ஆகிய தினங்களில் மாகாண கல்வி திணைக்கள மாகாண மட்ட மெய்வ்லுநர் போட்டிகள் ஆரம்பிக்கபடவுள்ள நிலையில் மைதான முன்னாயத்தம் தொடர்பான வேலைகளை மேற்கொள்ளுமாறு  சம்மந்தபட்ட மாநகர உத்தியோகத்தர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டுக்குழு தலைவர்  அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed